சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக விடுதியில் தங்கி, மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி, அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த சிலர், அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.