பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஈபிள் கோபுரத்தைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 7 பில்லியன் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈபிள் கோபுரத்தில் உள்ள மின் தூக்கியின் வழித்தடத்தில் தீ விபத்து விடப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ அணைக்கப்பட்டு நிலைமை சீரானதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.