இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : “இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.