நெல்லை மாநகரில் 3-வது முறையாக நள்ளிரவில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகரில் குறைந்த இடைவெளியில் மூன்றாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடாத வகையில் டவுண் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாதா பூங்கொடி தெருவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற போலீசார், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய மர்ம நபர்களை விரட்டி சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் தப்பி ஓடிய நிலையில், தீவிரமாக தேடி வருகின்றனர்.