கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புஷ்பா-2 படக்குழு 2 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கியுள்ளது.
கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2’ படம் திரையிடப்பட்ட நிலையில், அதனை காண அல்லு அர்ஜூன் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 2 கோடி நிதியுதவியை புஷ்பா 2 படக்குழு வழங்கியுள்ளது. அல்லு அர்ஜூன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் இணைந்து தலா 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.