நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாஜக துணை நிற்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாஜக துணை நிற்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதி கிடைக்கும் வரை  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு பாஜக துணை நிற்கும் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும் போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட,தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, காவல்துறை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் போன்றோருக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற தகவலும், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக நாளொறுமுறை பொய்யுரைத்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், குற்றவாளி திமுக-வை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கையில் தாமதப்படுத்துவது எப்படி தீர்வாகும்.

பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க குற்றமாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்வர்ஸ்டாலின்  தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது. ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் இதுவரை கைது செய்திருக்கும் காவல்துறை இது சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீர விசாரிக்க வேண்டும்.

கொடூர சம்பவம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் கடமை. இப்படி ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், குற்றம் செய்தவரை கைது செய்துவிட்டோம் என்று பிதற்றிக் கொண்டிருக்காமல், குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிகளை, தமிழக அரசும், தமிழக அரசின் கைப்பாவையாக உள்ள காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாஜக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு துணையாக நிற்கும்” என எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: bjpminister l muruganAnna University studentanna university student sexually assaulted!
Share
Tweet
SendShare
Previous Post

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் – குடும்பத்திற்கு 2 கோடி நிவாரணம் வழங்கிய புஷ்பா-2 படக்குழு!

Next Post

கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies