மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 -வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த ஜூலை 30 -ம் தேதி, முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. பின்னர், ஆகஸ்ட் 12 -ம் தேதி இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 3 -வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 331 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 92 புள்ளி 724 டிஎம்சியாக உள்ளது.