தெலுங்கு நடிகர்களைக் குறிவைத்து தெலங்கானா காங்கிரஸ் அரசு தாக்குவதாக
அல்லு அர்ஜுன் விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார்.
அல்லு அர்ஜூன் கைது நடவடிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கை சரியானது தான் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்தி தெலுங்கு சினிமா பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.