கோவை சாய்பாபா ஆலயததில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கத் தேர் இழுத்து வழிபட்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள, சாய்பாபா கோவில் தங்கத் தேரினை இழுக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும், வரும் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய, அருள்மிகு சாய்பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் திரு. ரமேஷ் குமார், விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் நாகராஜ்,
, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என அண்ணாமலை கூறியுள்ளார்.