மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மன்மோகன் சிங் ஒரு சிறந்த பொருளாதார வல்லுநர் மற்றும் அற்புதமான மனிதர் என தெரிவித்தார்.