மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தின் புதுமையான சீர்த்திருத்தவாதி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மன்மோகன் சிங் மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இந்தியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது நிதியமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன் சிங் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தின் புதுமையான சீர்திருத்தவாதி எனவும் புகழாரம் சூட்டினார்.