ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, பாஜக பிரமுகர் கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒலகடம் குலாலர் வீதியை சேர்ந்த செல்வராஜ், பாஜக பிறமொழி பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 24-ஆம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்வராஜ் வீட்டின் முன்பு 3 பேர் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது செல்வராஜை கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை மூவரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அசோக், திலீப், மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.