அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? - சிறப்பு தொகுப்பு!
Mar 14, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 30, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடையே புதிய குடியேற்ற கொள்கைகள் தொடர்பாக பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளது. புதிய குடியேற்றக் கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனின் நியமனமே குடியரசு கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட காரணம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அமெரிக்காவின் முன்னணி ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களில் ஒருவரும், தொழில் நுட்ப வல்லுனர்களில் ஒருவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை கடந்த வாரம் அமெரிக்க அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக டிரம்ப் நியமித்தார். ஸ்ரீ ராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் குடியேற்றச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாகவே திறமை அடிப்படையிலான குடியேற்றச் சீர்திருத்தங்களை ஸ்ரீராம் கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் திறமையானவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீராம் கிருஷ்ணன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் H1B விசாவில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது தான் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, வலதுசாரி அமைப்புகளின் முக்கிய பிரமுகரான லாரா லூமர், ஸ்ரீ ராம்கிருஷ்ணனின் நியமனத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப்பின் “AMERICA FIRST” என்ற கொள்கைக்கு எதிராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றச்சாட்டியுள்ளார். கூடுதலாக, கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீராம் கிருஷ்ணன் செய்த பதிவையும் லாரா லூமர் பகிர்ந்திருக்கிறார்.

கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்கினால் அமெரிக்க STEM பட்டதாரிகளின் நலன்கள் நேரடியாக பாதிக்கும் என்றும், உள்நாட்டு வேலைவாய்ப்பு சந்தைக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் என்றும் லாரா லூமர் கூறியுள்ளார்.

புதிய குடியேற்றக் கொள்கைகளால், அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று லாரா லூமரின் இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், லாரா லூமரின் விமர்சனங்களுக்கு, எலான் மஸ்க், அமெரிக்கா வெற்றி பெற வேண்டுமா தோற்க வேண்டுமா? என்றும், உலகின் தலைசிறந்த திறமைசாலிகளை விட்டுவிட்டால், கட்டாயப்படுத்தினால், அமெரிக்கா தோற்றுவிடும் என்றும் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இதே கருத்தை அரசாங்கச் செயல் திறன் துறையின் (DOGE) தலைவரான விவேக் ராமசாமி, ஏற்கெனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியின் கருத்துக்கள், இனவாதத்தை முன்வைக்கும் MAKE AMERICA GREAT AGAIN (MAGA) ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதுபோலவே, அரசின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி கொள்கை பிரிவின் தலைவரான டேவிட் சாக்ஸ், கிரீன் கார்டு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என ஸ்ரீராம் கூறவில்லை என்றும், நாடு சார்ந்த வரம்பை மட்டுமே நீக்க வேண்டும் என கூறுகிறார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதாவது, அமெரிக்க அரசு தற்போது உலகின் அனைத்து நாடுகளும் ஓரே எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளை வழங்கி வருகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு நாட்டுக்கும் சமமான எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளே ஒதுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கவிருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், குடியேற்ற கொள்கை தொடர்பாக மாகாவுக்கும் புதிய டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் மோதல் தீவிரமாகியுள்ளது. மேலும், டிரம்ப் அதிகமாக இடதுசாரி கொள்கையாளர்களையே முக்கிய பொறுப்புகளில் நியமிப்பதால், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ட்ரம்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags: Republican candidateMarylandgreen cardSriram Krishnannew immigration policies.americawashingtonkamala harrisDonald Trump
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் – மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை! : தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies