சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!
Aug 27, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 29, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு நடந்தது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

பெங்களுருவில் வசிக்கும்  பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். திடீரென்று, அவருக்கு ஒரு மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதில் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் லோகோ மற்றும் MD-ன் படம் இருந்ததால், அந்த செய்தியை நம்பிவிட்டார்.

வந்த செய்தி இது தான். ஒரு திட்டத்தை இறுதி செய்துள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக 56 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிறுவன MD தெரிவித்திருந்தார்.

இந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையானது என்று நம்பி, அனுப்பியவர் வழங்கிய இரண்டு வங்கி கணக்குகளுக்கு 56 லட்சத்தை மாற்றியுள்ளார் அந்த பெண். பரிவர்த்தனையை முடித்த பிறகு, சந்தேகங்கள் எழுந்ததால், MD-க்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். MD அந்த மொபைல் எண் தன்னுடையது இல்லை என்று சொன்னபோது தான் தான் ஏமாற்றப்பட்டது அனுப்பிரியாவுக்கு புரிந்தது. உடனே பெங்களூருவின் தென்கிழக்கு குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குமார் கொடுத்த தகவலின் படி, திட்டமிட்டு தனியார் நிறுவனக் கணக்காளரை ஏமாற்றி, 56 லட்சத்தைப் பறித்ததாக 23 வயது பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை தென்கிழக்கு பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிரிஷ்மா தலைமையிலான கும்பலின் வழிகாட்டுதலின்படி கணக்கைத் தொடங்கியதை ஒப்புக்கொண்ட குமார், தனது கணக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய 15,000 ரூபாய் வரை தந்ததாக தெரிவித்திருக்கிறார்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களாக இந்த சைபர் மோசடியை நடத்தியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா ரெட்டி, ஒரு பட்டய கணக்காளராகவும் உதவி இயக்குனராகவும், தெலுங்கு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணி புரிந்து வருகிறார். கிரிஷ்மாவிடமிருந்து, விலையுர்ந்த ஆடி ஏ4 கார், மொபைல் போன்கள் மற்றும் 56,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிரிஷ்மாவின் வங்கி கணக்குகளை முடக்கி, 5 லட்சத்தை மீட்டுள்ளனர். மீதமுள்ள 50 லட்சத்தை மீட்கும் முயற்சிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு விசித்திரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரிகளான CFO க்கள் மற்றும் தலைமை கணக்கு அதிகாரிகள் CAOக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. MD யிடம் கிராஸ் செக் செய்யாமல், முதலாளியின் வாட்ஸ்அப் உத்தரவுகளின் அடிப்படையில் நிதியை அனுப்ப கூடாது என்பது தான் இந்த செய்தியின் பாடம் .

Tags: Bengalurucyber crimefake WhatsApp messageChief AccountantKumarSouth East Cyber ​​Crime Policeprivate company
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies