பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் 17ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.
வள்ளி கும்மி குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாசாணியம்மன் புராண கதைகளை கூறும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.