ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி.60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பழவேற்காடு முதல் ஆரம்பாக்கம் வரையுள்ள மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.