விகல்ப் யோஜனா திட்டம்! : பயணிகள் பலன் பெறுவது எப்படி?
Oct 2, 2025, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விகல்ப் யோஜனா திட்டம்! : பயணிகள் பலன் பெறுவது எப்படி?

Web Desk by Web Desk
Jan 1, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெயிட்டிங் டிக்கெட் வைத்திருக்கும் ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விகல்ப் யோஜனா திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்த இந்த திட்டம் எவ்வாறு உதவுகிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பொதுவாகவே, இந்தியாவில் பண்டிகை காலம், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முதலே தொடங்கிவிடும். பிறகு நவராத்திரி திருவிழா, தீபாவளி,மகா சஷ்டி, திருக்கார்த்திகை என தொடர்ந்து, தை மாதம் பொங்கல் வரை கொண்டாடப் படுகிறது.

வெளியூரில் இருக்கும் மக்கள், பல்லாயிரக்கணக்கில் பண்டிகை காலத்தில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். அதற்காக, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்களைப் பெறுவது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.

பண்டிகை காலம் என்று மட்டும் இல்லை. எப்போதுமே ரயிலில் CONFIRM டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. ரயில்வே துறையில், டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் CONFIRM டிக்கெட் கிடைக்காமல் போகின்றன.

CONFIRM டிக்கெட் பெறுவதை எளிதாக்கும் வகையில், இந்த விகல்ப் யோஜனா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப் படுத்தியது.

கடந்த நிதியாண்டில், விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த 57,200 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு, மாற்று ரயில்களில் இருக்கைகள் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உள்ள பயணிகளுக்கு CONFIRM டிக்கெட் வழங்கவும், ரயிலில் உள்ள காலி இருக்கைகளை அதிகபட்சமாக பயன்படுத்துவதை உறுதி செய்யவும், மாற்று ரயில்களிலும் இருக்கைகள் ஒதுக்கப் படுகின்றன.

விகல்ப் திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், இருக்கை கிடைப்பது மாற்று ரயில்களைப் பொறுத்தது.

விகல்ப் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. கூடுதலாக, பயணிகள் மாற்று ரயிலை தேர்ந்தெடுக்கும் போது, அதன் புறப்படும் நேரத்தை உறுதிசெய்ய வேண்டும்.

ஏனெனில் தாங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ரயிலை விட 12 மணிநேரம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கலாம்.

வெயிட்டிங் லிஸ்ட் பயணிக்கு, மற்றொரு ரயிலில் இருக்கை உறுதி செய்யப்பட்டவுடன், பயணி தனது முந்தைய முன்பதிவுக்கு மாற்ற முடியாது.

உறுதி செய்யப்பட்ட மாற்று ரயில் டிக்கெட்டை வேண்டுமானால் ரத்து செய்யலாம். ரத்து செய்வதற்கு தனியாக கட்டணங்கள் உண்டு.

இரயில் பயணத்துக்கான இருக்கை கிடைத்தவுடன், டிக்கெட் தானாகவே CONFIRM ஆகிவிடும். இருக்கையை மாற்றியமைத்தவுடன், முதலில் தேர்ந்தெடுத்த ரயிலில் பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

விகல்ப் திட்டத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

முதலில், IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MOBILE APP க்குள் செல்லவேண்டும்.

புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத் தேதி மற்றும் ரயில் வகுப்பு போன்ற பயணத் தகவலை கொடுக்கவேண்டும்.

பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையைத் தொடங்க வேண்டும். இதற்கு பிறகு, கட்டணம் செலுத்தும் முன், “விகல்ப்”என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“விகல்ப்” என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, தேர்ந்தெடுத்த பாதையில் இயங்கும் மாற்று ரயில்களின் பட்டியல் இருக்கும். அவற்றில் விருப்பமான ரயில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செயல்முறை முடிந்ததும், உங்கள் PNR நிலையை சரிபார்க்க வேண்டும்.

விகல்ப் யோஜனாள என்பது முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள ரயில் பயணிகளுக்கு கேம் சேஞ்சர் ஆகும்.

Tags: Vikalp Yojana! : How can passengers benefit?
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் அசத்திய இஸ்ரோ! : விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி!

Next Post

வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிட இறைவனை வேண்டுகிறேன் – அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து!

Related News

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies