திருப்பூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனிக்கு ஏராளமானோர் பாதயாத்திரை மேற்கொண்டனர். வரப்பாளையம் பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் பக்தர்கள் மீது மோதியுள்ளது. இதில் பவானியை சேர்ந்த ராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.