ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு இடையே 10 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு – காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சராசரியாக மைனஸ் 5 டிகிரி செல்ஷியசுக்கும் குறைவாக வெப்பநிலை காணப்படும் நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தோடா செக்டார் பகுதியில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.