மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜக மற்றும் அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஐமன் ஜமால், சினேகா, பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் விரைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு, பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.