நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் முன்னாள் ராணுவ வீரரிடம் போலி இணையதளம் மூலம் 45 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வெலிங்டன் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தான் சேமித்து வைத்திருந்த 45 லட்சம் ரூபாய் பணத்தை போலி இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்ததாதவும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி இணையதளம் மூலம் பணம் பறித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷைலேஸ் குப்தா, ருஸ்தம் அலி என்ற இருவரை கைது செய்தனர்.