சபரிமலை செல்லும் நீலிமலைப்பாதையில் வலம் வந்த காட்டுயானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் நீலிமலைப்பாதையில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலையை யானை தாண்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.