அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழுவினரிடம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் உள்துறை செயலாளர் திரஜ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழுவினரை, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் சந்தித்து, வழக்கு தொடர்பாகவும், எஃப்.ஐ.ஆர். வெளியானது பற்றியும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக விளக்கம் அளித்தனர்.
மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரியிடமும், வழக்கு தொடர்பான முழு விவரங்களையும், மாணவியின் எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.