ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தந்தையை மகன் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலாடியைச் சேர்ந்த 90 வயது முதியவரான மணி என்பவரின் வீட்டை, அவரது மகன் முருகன் ஆக்கிரமித்துக் கொண்டு, மண்டையை உடைத்து, வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த அந்த முதியவர், நடவடிக்கை எடுக்கக்கோரி சிசிடிவி ஆதாரத்துடன் மனு அளித்தார்.