திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த திருமலைராஜன்-ஐஸ்வர்யா தம்பதியினர், வீடு கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் 34 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
கொரோனா கால கட்டத்தில் 2 மாதம் தவணை செலுத்த முடியாமல் போனதால் சமரச தீர்வு 18 லட்சம் ரூபாயை செலுத்த ஒப்புக்கொண்டு அதன்படி பணத்தை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களது வீடு ஜப்தி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.