அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார்.
உடனடியாக அவரை தடுத்த நிறுத்த காவல்துறையினர் முயன்றனர். இருப்பினும் தடையை மீறி சீமான் முன்னேற முயன்றதால் இருதரப்பினரிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக சீமானை போலீசார் கைது செய்தனர்.