மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து செவிலியர்களின் உடமைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
புதூரில் உள்ள பாரதி மருத்துவமனை கட்டடத்தின் 3-வது தளத்தில் செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தன. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அறையில் இருந்து புகை வெளியேற தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் 30க்கும் மேற்பட்டோர், உடனடியாக அறையை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும், செவிலியர்களின் உடமைகள் மற்றும் ஆவணங்கள்
எரிந்து சேதமடைந்தன.