இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தொடரப்பட்ட மனுவிற்கு இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும், சின்னம் தொடர்பான பிரச்னை இருக்கும்போது மட்டுமே ஆணையம் தலையிட முடியும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.