வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
Sep 10, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

Manikandan by Manikandan
Jun 11, 2026, 09:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிஇந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதில் தமிழக முதலமைச்சர் விஜய், மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு நகர்ந்து வரும் நிலையில், அனைவரின் கூட்டுப் பொறுப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களுக்கான சரியான சூழலை உருவாக்குவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், அதிகாரமளிக்கப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முக்கிய சக்தியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் முக்கிய அடித்தளமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என தெரிவித்துள்ளார். விக்ஷித் பாரத் என்ற நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் அவர் கூறினார்.
க்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags: delhiNarendraModiniti ayog
Share
Tweet
SendShare
Previous Post

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

Next Post

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies