ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2026, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்காக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகளுக்கான முழுத் தயார் நிலையில் இருந்தாலும், மிகப்பெரிய தாக்குதல் தேவையற்றதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப் பட்ட நீண்ட கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது.

ஈரானுடன் இனி பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முழு அளவிலான ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் துறைமுக முற்றுகைக்கும் உத்தரவிட்டார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இராஜதந்திர பேச்சுவார்த்தை அல்லது இராணுவ நடவடிக்கை மூலமாகவோ ஈரான் போரில் இருந்து வெளியேறும் வழியை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி அந்நாட்டைப் பகுதி பகுதியாக அழிக்க முடியும் என்றும், அதை இன்னும் விரைவாகவும் செய்ய முடியும் என்றும், அதே நேரம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் கூறியுள்ள ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஈரான் அதிக தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது என்று கூறிய ட்ரம்ப் ஒரு வேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். அதேநேரம் ஈரானுடனான எந்தவொரு உடன்பாடும், தெஹ்ரான் அணு ஆயுதம் பெறுவதை முழுமையாக தடை செய்யும் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அதிபரின் இராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையிலான ‘போர் அதிகாரத் தீர்மானத்தை’ அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மறுநாளே அதிபர் ட்ரம்ப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஈரான் மீது தினசரி கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran wariran warStrait of HormuzIran-US wariran war news
Share
Tweet
SendShare
Previous Post

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies