சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி, ஆழமான பகுதிகளில் கவிழ்ந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை இருந்து வந்தது.
அதனை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மலைப்பாதையின் சாலையோரம், ரப்பர் ரோலர் கேஸ் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் இதில் மோதும்போது வாகனங்களுக்கோ, அதில் பயணிப்பவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.