புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கரை பகுதிகளில் அதிகளவு மக்கள் கூட வாய்ப்புள்ளதால் 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் இயக்குவோர், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.