தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்த புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது, பாமக-விற்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவுட்டுள்ள அவர், மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி, அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக பங்காற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.