மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்களுக்குப் பின் டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நிறைவுற்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக்காலத்தில் கோயிலில் 33 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பின் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.