வேலூரில் திமுக அரசுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட கிராமிய காவல் நிலைய முதல்நிலை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் கிராமிய காவல் நிலைய முதல்நிலை காவலர் அன்பரசன், மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வந்த பதிவு ஒன்றுக்கு, திமுக அரசுக்கு எதிராக கண்டன பதிவை கமெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில், முதல்நிலை காவலர் அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.