கடலூர் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரிசி பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரன், பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் பாலாஜி ஆகிய இரண்டு சிறுவர்கள் நத்தவெளி அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சிறுவர்களின் பெற்றோர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.