வாழ்வில் மகிழ்ச்சியும், சிறந்த வளமும் பிறக்கட்டும் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என கூறியுள்ள அவர்,
சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து, தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.