பொது பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் விரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ஆயிரத்து 966 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், 818 ரூபாய் 50 காசுகளுக்கு வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.