யமுனை நதியை தூய்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற தவறியதற்காக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாஜக சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் பாஜகவினர், கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரேந்திர சச்தேவா, தேச விரோத சக்திகளுடன் சேரமாட்டோம் என்றும் அவர்களிடம் இருந்து நன்கொடை பெற மாட்டோம் என்றும் கெஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.