தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், 500 அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் உதவியுடன் மேம்படுத்தப்படும் என்றால், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 44 ஆயிரம் கோடி என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், கல்வித்துறைக்கான நிதியை என்ன செய்கிறது திமுக அரசு என கேள்வி எழுப்பியுள்ள அவர், தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளப்பட்டுள்ளதா? என வேதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக பள்ளி கட்டடங்களை கட்டிக் கொடுப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.