சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ்-ன் மகன் ஜெய பிரதீப்பும் உடனிருந்தார். ரஜினி உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த்தை சந்தித்தாக தெரிவித்தார். அரசியல் ரீதியான விவாதம் எதுவும் இந்த சந்திப்பில் நடைபெறவில்லை எனவும் ஓபிஎஸ் கூறினார்.