டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடர் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் கடும் பனிமூட்டம் காரணமாக சரியாக பார்க்க முடியவில்லை என, லோகோ பைலட்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மூடுபனி மற்றும் கடும் குளிர் காரணமாக ரயில்களை இயக்குவது சவாலாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அசாம் மாநிலம், குவஹாத்தி நகரில் அடர்ந்த பனிமூட்டத்திற்கு இடையே ரயில்கள் ஊர்ந்து சென்றன. மூடுபனி காரணமாக ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.