நடப்பாண்டும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் முறையிலேயே டோக்கன் வழங்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், பாலமேடு மஞ்சள்மலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு விழா பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், எப்போதும் போல இந்தாண்டும் தமிழ்நாடு அரசு பரிசுகள் வழங்காது எனவும், நன்கொடையாளர்கள் தரப்பில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். நடப்பாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இந்த போட்டியில் 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 500க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்கின்றன.