புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
மேலும் குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான இணையவழி சேவையையும் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக, 750 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.