முதுகு வலி காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5வது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை அபாரமாக பந்து வீசிய பும்ரா, 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பும்ரா தொடர்ந்து அதிக ஓவர்கள் வீசுவதாகவும், இதனால் அதிக பணிச்சுமை ஏற்பட்டு அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்நிலையில் முதுகுவலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய பும்ரா, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.