தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீ வைத்தார்.
இதனால் கரும்புகையுடன் தீ மளமளவென பற்றிய நிலையில், அருகில் இருந்த கோயில் பணியாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். மேலும், தீ வைத்த நபரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது பெயர் ஆனந்தபாலன் என்பதும், அவர் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட நபர், 10 லிட்டர் பெட்ரோல் கேனுடன் கோயிலுக்கு வந்து தீ வைத்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.