ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கான தண்டனை விவரம் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தேர்தல் நிதியில் இருந்து ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் செய்த மேல்முறையீடு மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 10-ம் தேதி டிரம்புக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும், டிரம்ப் புதிய அதிபராக தேர்வாகி இருப்பதால், சிறை தண்டனை இல்லாமல், அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.