அமெரிக்காவில் டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதற காரணமான நபரின் செல்போனில் தற்கொலை குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் லாஸ் வேகாஸ் நகரில் அவரது ஹோட்டலுக்கு வெளியே பேட்டரி எலெக்ட்ரிக் கார் வெடித்து சிதறியது. விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் ராணுவ வீரரான மேத்யூ லிவல்ஸ்பெர்கர் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அவரது செல்போனில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும், அமெரிக்கர்கள் தவறான தலைமையால் வழி நடத்தப்படுவதாகவும் தற்கொலை குறிப்பு பதிவாகியுள்ளது.