பாஜக மூத்த நிர்வாகி சந்தானக்குமார் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில பொதுக்குழு உறுப்பினரும், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞருமான சகோதரர் .A.சந்தானக்குமார் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
அன்னாரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.