திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்யும் அவலம் அரங்கேறி வருகிறது.
கும்மிடிப்பூண்டியை சுற்றி அமைந்துள்ள சுண்ணாம்பு குளம், ஓபசமுத்திரம், பூவலை, தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பெண்களும் மது விற்பனையை குடிசைத் தொழில் போல் செய்து வருகின்றனர்.இந்த சட்டவிரோத மது விற்பனைக்கு எளாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை மொத்த விற்பனை முனையமாக செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமலும் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.